வெளிநாட்டில் இருந்து வந்த நடிகர் பிரித்விராஜிற்கு கொரானோ சோதனை முடிவு வெளிவந்தது.!!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழிலும் பரிட்சயமான நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் சமீபத்தில் ஆடுஜீவிதம் என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றார்.

இந்தப்படம் வெளிநாடுகளுக்கு சென்று மாட்டிக் கொண்டு தவிக்கும் இந்தியர்களின் வாழ்வை பற்றியது. இந்தப் படத்துக்காக 58 பேர் கொண்ட குழுவினர் ஜோர்டான் நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்திற்கு முகாமிட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.

ஆனால் அந்தச் சமயம் கொரானோ தொற்று வேகமாக பரவியதால் அவர்கள் பாலைவனத்திலே தங்கும் நிலைமை ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து மீட்டு வர முடியாது என மத்திய அரசும் மாநில அரசும் கைவிரித்து விட்டது.

அதன் பின்னர் அந்த நாட்டு அரசிடம் அனுமதி வாங்கிய அந்த படக்குழு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தியது. மீண்டும் படப்பிடிப்பு வெற்றிகரமாக இப்பொழுது முடிந்துள்ளதுஎன்பதை நடிகர் பிரித்விராஜ் தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் தெரிவித்தார்.

சமீபகாலமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் நிலையில் ஜோர்டானில் சிக்கியுள்ள படக்குழுவை மிக்க தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. 58 பேரும் தனி விமானம் மூலம் மே 22ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு கொரானோ பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது நடிகர் பிரித்விராஜின் கொரானோ பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளது. அதில் நெகட்டிவ் உள்ளது. இதன் காரணமாக அவர் சில நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.