தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தலைவர் அமைச்சரிடம் வேண்டுகோள்!

தமிழகத்தில் கொவிட்19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து ஊரடங்கு அமல் படுத்தி வருகிறது இந்த ஊரடங்கினால் பல்வேறு துறைகள் பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன குறிப்பாக அனைவரும் விரும்பக்கூடிய திரைத்துறை பணிகளும் முடங்கியுள்ளன.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு தற்போது கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் திரைத்துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்கும் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கக் கோரியும் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு .கடம்பூர் ராஜு அவர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியும், மேலும் சிறு படங்களுக்கான மானியம் வழங்கிடவும் புளூரே டிஸ்க், ஹார்ட் டிஸ்க், கட்டணம் செலுத்தும் கால அவகாச தேதியை நீட்டித்து அறிவிக்கவும், மேலும் மானியத்தொகையை உடனடியாக வழங்கி சிறுபட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட கோரியும் மனு அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தலைவர் திரு, ஜாகுவார் தங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுகுழு உறுப்பினர்கள் P. ரங்கநாயக்கலு, பா.ரஞ்சித்குமார், M.C. சேகர், J.மணிமாறன், T. நாகலிங்கம், T. சதாசிவமூர்த்தி, P. தயாநந்தன் ஆகியோர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்களை சந்தித்து வேண்டுகோள் மனுவை அளித்தது குறிப்பிடத்தக்கது .