சிங்கப்பூரில் சமூக அளவிலான கிருமிகள் பரவல் ஒரு நாளைக்கு 10 க்கும் கீழ் இருந்தால் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படலாம்…!

சிங்கப்பூரில் தற்போது முதல் கட்டம் தொடர்ந்து வருகிறது. மூன்று கட்டங்களாக வரையறுக்கப்பட்ட இந்த அதிரடி திட்டத்தை கடந்த மாதம் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. தற்போது முதல் கட்டம் இருப்பதால், சிங்கப்பூரின் சமூக அளவில் பரவும் COVID-19 கிருமித்தொற்று எண்ணிக்கை ஒரு நாளைக்கு 10 க்கும் கீழ் இருந்தால் வரும் வாரங்களில் மேலும் சில சமூக கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

மாறாக தற்போது கடைப்பிடித்து வரும் முதல் கட்டத்தில் சமூக எண்ணிக்கை நாளொன்றுக்கு 50-ஐ தாண்டினால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது நடைமுறையில் இருக்கும் அதிரடி திட்டம் சமூக அளவில் கிருமி பரவுவதை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் டுடே நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி தொடங்கிய அதிரடி திட்டம் சமூக அளவிலான பரவல் வாரத்துக்கு சராசரி சுமார் 50 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 5 க்கும் கீழே உள்ளது. இதுவே பெரும் வெற்றிக்கான முதல் படி.