சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இன்று முதல் வழக்கம்போல ஓடும்…

முறியடிப்பு காலம் நேற்றோடு முடிவடைந்து இன்று முதல் கட்டுப்பாடுகளை தளர்த்தி முதற்கட்ட அதிரடி திட்டங்கள் தொடங்கும் வேலையில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் முன்பிருந்தது போல வழக்கம்போல இயங்கும் என்று போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.

ஆனால் பொழுதுபோக்கு பகுதிக்கு செல்லும் பேருந்துகள் தேவை குறைவாக இருப்பதால், அங்கு பேருந்து மற்றும் ரயில் சேவையை மட்டும் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்று கூறியுள்ளனர்.

நோய் முறியடிப்பு காலத்துக்கு முன் இருந்த நிலவரப்படி, அதே சேவையும் நடைமுறைக்கு வரும். தமோஸ் ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் 7 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் உட்ச நேரத்தில் 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவையும் இயங்கும் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக பேருந்திலும் சரி, ரயில்களிலும் சரி பயணிகளிடையே பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதனாலேயே இதுவரை பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அதை உறுதிப்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று பாதுகாப்பு இடைவெளி உறுதிப்படுத்தும் கடுமையான சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.