சிங்கப்பூரில் 20 ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்கள் இம்மாத இறுதிக்குள் முழுமையாக கிருமித் தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்புவர் : அமைச்சர் லாரங் வோங்..

COVID 19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்கள் இம்மாதம் இறுதிக்குள் குணமடைந்து அவர்கள் வசிப்பிடம் திரும்புவர் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரங் வோங் கூறியுள்ளார். கண்டிப்பாக அடுத்த மாதம் மேலும் அதிகமாக குணமடைந்து வீடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கிருமித்தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை சிறிது காலத்துக்கு துரித அளவிற்கு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நாளொன்றுக்கு தங்கும் விடுதியில் வசிக்கும் சுமார் 3,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதிகாரிகள் நாளடைவில் அதைக் குறைக்க எண்ணுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.