உரிய பாதுகாப்புடன் பயண கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை..!

சிங்கப்பூரில் தற்போது முழு ஊரடங்கு இருக்கும் நிலையில் பயண கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து சிங்கப்பூர் அரசு மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. சிங்கப்பூர் எல்லைகைளை மீண்டும் திறப்பது குறித்து ஆராய்வதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார் .

இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் ஊரடங்கு தளர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி ஊரடங்கு தளர்வை கட்டுப்பாடுடன் செயல்படுத்த உள்ளதாக இந்த நாடுகளுடன் இணைந்து சிங்கப்பூரும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக கூறியுள்ளார் .

இதனையொட்டி வெளிநாட்டில் இருந்து வருபவர்களும், வெளிநாட்டிற்கு செல்பவர்களும் கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இரு நாடுகளுக்கு இடையேயான பயணிகள் கட்டுப்பாடுகளை தளர்த்த படலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார் .

இதனை தொடங்குவதற்கு முன் வெளிநாடுகளில் உள்ள கிருமித்தொற்று நிலவரங்களையும் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அனைத்தையும் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்னரே இது முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்