கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது கோயம்பத்தூர்..! ஆச்சிரியத்தில் மற்ற மாவட்டங்கள்…

கொரோனா கிருமித்தொற்று உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் 8,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 2134 பேர் கொரோனவிலிருந்து குணமடைந்து இருந்து மீண்டு உள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் கொரோனாவால் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 145 பேர் சிகிச்சை பெற்று குணம் ஆகியுள்ளனர்.

தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணியும் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார். ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தைப் பொருத்தவரை கோவை மாவட்டம் கொரோனாவே இல்லாத மாவட்டமாக உருவாகியுள்ளது. முக்கியமாக இவ்வளவு பெரிய மாநகராட்சி இந்த நிலைக்கு வந்தது அனைவருக்கும் ஆச்சிரியத்தை அளித்துள்ளது.