தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவில் திருடன் போலீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் ஹோம்லியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன்பே சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து உள்ளார். மேலும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் தற்போது அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
