சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் கொவிட்19 நோய் தொற்றிலிருந்து 626 பேர் குணமடைந்துள்ளனர்!

கொவிட்18 வைரஸ் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை தற்போது சிங்கப்பூரில் கணிசமாக உயர்ந்து வருகிறது.

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 626 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், கடந்த வாரம் முதல் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது மிகப் பெரிய நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் சிங்கப்பூரர்களுக்கும் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட்-19: மே 12 நிலவரப்படி

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 884

  • கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில், வெளிநாட்டிலிருந்து வந்தோர்: 0
  • சமூகத்தில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 4 (3 சிங்கப்பூர்வாசிகள், ஒருவர் வேலை அனுமதி அட்டை உடையவர்)
  • வேலை அனுமதிச் சீட்டு உடையோர் (ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிப்போர்): 3
  • வேலை அனுமதிச் சீட்டு உடையோர் (ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்போர்): 877

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 98 விழுக்காட்டினர், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்; எஞ்சியோர் தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் நிலையில் உள்ளனர்

இதுவரை கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 24,671

  • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்போர்: 1,132 (தீவிர சிகிச்சைப் பிரிவில், 20 பேர்)
  • சமூக பராமரிப்பு வசதிகளில்: 19,667
  • உயிரிழப்பு: 21
  • இதுவரை மருத்துவமனையிலிருந்து வெளியேறியோர்: 3,851 (இன்று: 626)

Moh Website