மே 19 அன்று நாடு முழுவதும் விமான சேவையை ஏர் இந்தியா தொடங்குகிறதா..?

கொரோன கிருமி எதிரொலியாக நாடு முழுவதும் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் நாடு முழுவதும் மீண்டும் உள்நாட்டு விமான சேவையை வரும் 19ஆம் தேதி முதல் தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பல மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று மே 19ம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை சிறப்பு விமான சேவைகள் இயக்கத் திட்டம் என்று கூறப்படுகிறது. பல்வேறு நகரங்களுக்கு சென்று சொந்த ஊர் திரும்ப முடியாமல் முடங்கிப் போய்க் கிடக்கும் மக்களுக்கு இது நல்ல முடிவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு முதற்கட்டமாக விமான சேவை தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.