உலகின் நம்பர் ஒன் விமான நிலையமாக சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தேர்வு…!

உலகின் தலைசிறந்த “உலக விமான நிலைய விருது 2020இல்” ஹைடிராக்ஸ் என்ற நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 550 விமான நிலையங்களில் முதலாவதாக தலை சிறந்த விமான நிலையம் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் என்று தேர்ந்தெடுத்துள்ளது.

தற்போது சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம்தான் உலகின் தலை சிறந்த விமான நிலையமாகும். அதுமட்டுமல்லாமல் இந்த விமான நிலையம் 2019 ஆம் ஆண்டிலும் முதலிடத்தில் இருந்தது. அதே போல் இந்த ஆண்டிலும் முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

டோக்கியோ ஹனேடா விமான நிலையம் இரண்டாவது இடத்திலும், தோஹா சர்வதேச விமான நிலையம் மூன்றாவது இடத்திலும்,
அதன்படி தென்கொரியா நான்காவது இடத்திலும், ஜெர்மனி முனிச் விமானநிலையம் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.