சிங்கப்பூர் வாசிகளுக்கு RAZER தொழில்நுட்ப நிறுவனம் 5 மில்லியன் முகக் கவசங்கள் வழங்க திட்டம்..

சிங்கப்பூரில் உள்ள RAZER தொழில்நுட்ப நிறுவனம் 5 மில்லியன் முகக் கவசங்கள் வழங்க திட்டமிட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து ஒரு கவசத்தை இலவசமாக வழங்கவும் திட்டமிட்டுள்ளது. அதற்காக தீவு முழுவதும் வினியோகம் செய்யும் 20 இயந்திரங்களையும் இந்த நிறுவனம் அமைத்துள்ளது.

சமூகத்தின் பாதுகாப்பை இது கண்டிப்பாக உறுதி செய்ய உதவும் ,அதுமட்டுமல்லாமல் இந்த 5 மில்லியன் முதல் கவசங்களை விநியோகிக்கும் முடிவு சமூகப் பாதுகாப்பிற்காக என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி கூறியுள்ளார்.