சிங்கப்பூரில் ஒரே நாளில் 425 பேர் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது .

வைரஸ் தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாக்க சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சிங்கப்பூரில் தற்போது உள்ள அதிரடி நடவடிக்கைகளாலும் திட்டங்களாலும் சமூக பரவல் என்பது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது .

தற்போது வைரஸ் தொற்றில் இருந்து பெருமளவில் நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் நோயாளிகள் குணமடைந்து வரும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மே 10 நேற்றைய நிலவரப்படி 425 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மே 9 நிலவரப்படி 256பேரும் ,மே8 நிலவரப்படி 328 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரில் தற்போது முழுவதுமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2721 உயர்ந்துள்ளது தற்போது குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் நோயை கட்டுப்படுத்தி இந்த நோயிலிருந்து வென்றுவிடலாம் என்ற தன்னம்பிக்கை அனைவருக்கும் பிறந்துள்ளது.