சிங்கப்பூரில் ஒரே நாளில் 500 க்கும் மேற்ப்பட்டோர் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தனர்!

சிங்கப்பூரில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை கடந்தவாரம் முதல் உயர்ந்து வருகிறது .

வைரஸ் தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாக்க சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மே 11 நிலவரப்படி கொவிட் 19 தொற்றிலிருந்து 504பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பினர் .

கொவிட்-19: மே 11 நிலவரம்

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள்: 486

  • கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 0
  • சமூகத்தில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள்: 3 (2 சிங்கப்பூர்வாசிகள், ஒருவர் வேலை அனுமதி அட்டை உடையவர்)
  • வேலை அனுமதிச் சீட்டு உடையோர் (ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிப்போர்): 2
  • வேலை அனுமதிச் சீட்டு உடையவர்கள் (ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்போர்): 481

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 97 விழுக்காட்டினர், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்.

இதுவரை கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள்: 23,787

  • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்போர்: 1,093 (தீவிர சிகிச்சைப் பிரிவில், 24 பேர்)
  • சமூக பராமரிப்பு வசதிகளில்: 19,448
  • உயிரிழப்பு: 21
  • இதுவரை மருத்துவமனையிலிருந்து வெளியேறியோர்: 3,225 (இன்று: 504)
Moh website Sg