கொவிட்19:சிங்கப்பூர் சமீபத்திய நிலவரம்.

கொவிட்19:நோய்த்தொற்றை தடுப்பதற்கான அதிரடி திட்டங்கள் பெருமளவில் பயன்தந்துள்ளன சிங்கப்பூரில் தற்போது சமூக பரவல் என்பது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைப் பொருத்த அளவில் வைரஸ் நோயாளிகள் பெருமளவில் குணமடைந்து வருகின்றனர், நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

மே9 நண்பகல் 12 மணி நிலவரப்படி, சிங்கப்பூரில் மேலும் 753 பேருக்குப் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அதன் முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதிச் சீட்டு உடையவர்கள்.

பாதிக்கப்பட்ட 753 பேரில், 9 பேர் சிங்கப்பூரர்கள்/ நிரந்தரவாசிகள்.

சுகாதார அமைச்சு, இன்று பின்னிரவு வெளியிடவிருக்கும் செய்தி அறிக்கையில், மேல் விவரங்களைத் தெரிவிக்கும்.