இக்கட்டான நேரத்தில் விவசாயிக்கு உதவி செய்த இயக்குனர் சசிகுமார்.. நெகிழ்ச்சியில் விவசாயி …

sasikumar

உலகம் முழுவதும் கொரோன தொற்று காரணமாக மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். கொரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து உள்ளது. தற்போது ஊரடங்கில் இருந்து சற்று தளர்வுகள் மேட்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் ஊரடங்கின் போது விவசாய பணிகளுக்கு அரசு எந்த வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. ஆனால் விவசாயிகள் தாம் அறுவடை செய்தவற்றை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மீனாட்சிபுரத்தை சேர்த்த விவசாயி பாலகிருஷ்ணன் வாழைத்தோப்பு வைத்துள்ளார். அவர் பயிரிட்ட வாழை மரத்தை அறுவடை செய்ய வழியின்றி தவித்து வருவதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் நான் துபாயில் வேலைபார்த்து பிடிக்காமல் போனதால் சொந்த ஊரில் வேலைப்பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு 3.5 ஏக்கர் நிலம் வாங்கி வாழை தோப்பு அமைத்தேன். ஆனால் அறுவடை செய்யும் காலத்தில் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகிறேன். யாராவது உதவி செய்களேன் என்று வீடியோ பதிவு செய்து உள்ளார்.

அந்த விவசாயின் விடியோவை கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் இரா. சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனை கண்ட இயக்குனரும் மற்றும் நடிகருமான சசிகுமார் அந்த விவசாயிக்கு 25 ஆயிரம் கொடுத்து உதவி உள்ளார். அந்த விவசாயி பெற்றுக்கொண்ட பணத்தை கடனாக பெற்றதாகவும் திருப்பி கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார்.