சிங்கப்பூரில் ஒரே நாளில் 328 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் .

கொவிட்19 வைரஸ் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்க சிங்கப்பூர் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த நடவடிக்கைகள் பெருமளவில் பயனளித்து உள்ளன .

சிங்கப்பூரில் மட்டும் நேற்று மே8 ஒரே நாளில் கொவிட் 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 328 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரில் எடுத்து வரப்படும் நோய்த்தொற்று நடவடிக்கைகளினால் சமூக பரவல் என்பது பெருமளவு கட்டுப்படுத்தபட்டுள்ளது மேலும் சிங்கப்பூரை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19: மே 8 நிலவரப்படி

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 768

  • கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில், வெளிநாட்டிலிருந்து வந்தோர்: 0
  • சமூகத்தில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 11 (10 சிங்கப்பூர்வாசிகள், 1 வேலை அனுமதி அட்டை உடையோர்)
  • வேலை அனுமதிச் சீட்டு உடையோர் (ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிப்போர்): 7
  • வேலை அனுமதிச் சீட்டு உடையோர் (ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்போர்): 750

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 93 விழுக்காட்டினர், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்; எஞ்சியோர் தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் நிலையில் உள்ளனர்

இதுவரை கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 21,707

  • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்போர்: 1,245 (தீவிர சிகிச்சைப் பிரிவில், 22 பேர்)
  • சமூகப் பராமரிப்பு வசதிகளில்: 18,402
  • உயிரிழப்பு: 20
  • இதுவரை மருத்துவமனையிலிருந்து வெளியேறியோர்: 2,040 (இன்று: 328)
MOH SG Website