மலேசியாவில் இருந்து திருச்சி செல்லும் மீட்பு விமானத்தை இயக்கும் பெண் விமானி!

உலகம் முழுவதும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியானது வந்தே பாரத் என்னும் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறார்கள்.

நாளை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட கூடிய இந்த வேளையில் மலேசியாவில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தை பெண் விமானி ஒருவர் இயக்குகிறார்.

இன்று மதியம் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா நோக்கி மீட்பு விமானம் புறப்பட்டது அந்த விமானமானது இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை மீட்டு வந்தடையும்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வரும் விமானத்தை இயக்குகிறார் பெண் விமானி திருமதி. கவிதாராஜ்குமார். அதேபோல் மஸ்கட்டில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நோக்கி செல்லும் விமானத்தை இயக்குகிறார் பெண் விமானி திருமதி.பிந்துசெபாஸ்டின்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அங்கு இருக்கக்கூடிய இந்தியர்களை மீட்டு விமான எண் IX682/IX681விமானம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி நோக்கி புறப்பட இருக்கிறது அந்த விமானத்தை திருமதி. கவிதாராஜ்குமார் அவர்கள் இயக்குகிறார்கள் நாளை உலகம் முழுவதும் அன்னையர் தினத்தை கொண்டாடக்கூடிய இந்த வேளையில் அன்னையைப் போலவே அனைத்து பயணிகளையும் தங்களின் தாய் இல்லங்களுக்கு இவர்கள் அழைத்து வருவார்கள் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது .