சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களின் கால அட்டவணை மற்றும் கட்டண விவரங்களை வெளியிட்டது சிங்கப்பூர் இந்திய தூதரகம் .

சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்ல விரும்புபவர்களின் விவரங்களை சேகரித்த இந்திய தூதரகம் தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் கால அட்டவணை மற்றும் அதற்கான கட்டணங்களை வெளியிட்டுள்ளது .

தற்போது முதற்கட்டமாக சிங்கப்பூரில் இருந்து டெல்லி, மும்பை ,பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமானம் சிங்கப்பூரிலிருந்து இயக்கப்படுகிறது

இந்திய தூதரகத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட விமான கால அட்டவணையில் தமிழகம் செல்லும் விமானத்தின் தகவல் ஏதும் குறிப்பிடப்படவில்லை இருப்பினும் வரும் காலங்களில் அதாவது இரண்டாம் கட்ட விமானபோக்குவரத்து அட்டவணையில் தமிழகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா செல்லும் விமானத்திற்கான கட்டண விவரங்கள் மற்றும் அந்த விமானத்தில் பயணிக்க கூடிய பயணிகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும் என இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

பயணிகளுக்கு அவர்கள் புறப்படும் நேரம் மற்றும் விமானத்தின் முழு கால அட்டவணை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். பயணிகள் தங்களுக்கான பயணச் சீட்டினை ஏர் இந்தியா நிறுவனத்திடம் நேரடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். பயணிகள் அனைவரும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய எண் ஒன்றாம் முனையத்திற்கு வரவேண்டும் பயணிகள் நான்கு மணி நேரத்திற்கு முன்பாக வருகை தரவேண்டும். (Not to use Mrt).விமான பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே விமான நிலையத்திற்கு வர வேண்டும். விமான பயணிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

HCI Singapore