சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோருக்கான விதிமுறை தகவல்களை வெளியிட்டது -சிங்கப்பூர் இந்திய தூதரகம்

சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் பின்வருமாறு.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

தாயகம் செல்ல விரும்புவர்கள் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது .

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்களின் நேரம் மற்றும் தேதி விரைவில் அதாவது முதல்வாரத்தில் அறிவிக்கப்படும், தேவை இருப்பின் அதிகப்படியான விமானங்களை இயக்குவது பற்றி ஆலோசிக்கப்படும்.

சிங்கப்பூரில் இருந்து முதல் வாரத்தில் இயக்கப்படும் விமானங்களின் இருக்கை வரையறுக்கப்பட்டதாகும்,முதல்வாரத்தில் செல்லும் விமானத்தில் பயணிக்கக்கூடிய பயணிகளை அரசே தேர்வு செய்யும், குறிப்பாக வேலை இழந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், வயது முதிர்ந்தோர் குறிப்பாக மருத்துவ உதவி அவசரமாக தேவைப்படுவோர்,அல்லது குடும்ப உறுப்பினர் யாரேனும் இந்தியாவில் இறந்திருந்தால்,குறுகிய கால விசா வைத்திருப்போர்,விசா காலாவதியான பயணிகள், சுற்றுலாப்பயணிகள் ,கல்லூரி மாணவர்கள் அவர்களின் கல்லூரி மற்றும் விடுதி மூடி இருப்பின் செல்லலாம். மேலே குறிப்பிட்டுள்ள அனைவரும் முதல்வாரத்தில் செல்லக்கூடிய விமானத்தில் செல்ல தகுதியுடையவர்கள் அவர்களுக்கான விமான நேரம் மற்றும் தேதி மின்னஞ்சல் மூலம் அவர்களுக்கு அனுப்பப்படும்.

விமானத்தில் செல்லக்கூடிய பயணிகளுக்கான விமான கட்டணம் பொருந்தும். அதற்கான கட்டண விவரத்தை அந்தந்த விமான நிறுவனங்கள் தெரிவிக்கும் அதற்கான முழு விவரமும் சிங்கப்பூர் இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும் .

அனைத்து பயணிகளும் படிவம் 3ஐ பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம் அல்லது விமான நிலையத்திற்கு கொண்டு வரலாம் பயணிக்கக்கூடிய பயணிகள் அனைவரும் படிவம் எண் 3 பூர்த்தி செய்ய வேண்டும்.

பயணிக்கக்கூடிய பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் பயணிகள் இந்தியாவில் தரையிறங்கிய பிறகு அவர்களுக்கான பரிசோதனையும் தொடங்கப்படும். கொவிட்19 வைரஸ் நோய் தொற்று அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே விமானத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியா இறங்கியவுடன் அனைத்து பயணிகளுக்கும் முதற்கட்ட பரிசோதனை நடத்தப்படும் அனைத்து பயணிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகளுக்கு 14 நாட்கள் நிறைவடைந்தவுடன் பரிசோதனை செய்யப்படும் .

இந்தியா வந்திறங்கிய பயணிகள் அனைவரும் 14 நாட்கள் அரசு மருத்துவமனை அல்லது கட்டணம் செலுத்திய தனியார் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தங்கலாம். என சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .