14,000 வெளிநாடு வாழ் இந்தியர்களை விமானம் மூலம் மீட்க நடவடிக்கை-மத்திய அரசு

உலகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பல நாடுகளில் சிக்கியுள்ளனர், அவர்களை மீட்பதற்காக மத்திய அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி 13 நாடுகளில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

13 நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும், இவர்கள் மீட்டுக் கொண்டு வரப்பட்ட உடன் அவர்களுக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்படும் என்றும், மேலும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சி மற்றும் சென்னை வழியாக இந்தியர்களை மீட்பதற்கான திட்ட விமான அட்டவணையும் அது வெளியிட்டுள்ளது இதன்படி தூதரகம் தயாரித்துள்ள அட்டவணையின் படி அவர்கள் மீட்கப் படுவார்கள்.