நாளை முதல் அனைத்து வங்கிகளும் செயல்படும் -மத்திய அரசு அறிவிப்பு

வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மூன்றாம் கட்ட ஊரடங்கு நாளைமுதல் நீட்டிக்கப்படுகிறது

இந்தியா முழுவதும் நாளை முதல் இந்த மாதம் 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதால் சில வங்கி நிறுவனங்களுக்கு மட்டும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அனைத்து வங்கிகளும் 50% ஊழியர்களுடன் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் செயல்படும் இதற்கான ஊழியர்கள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

மாவட்ட வங்கி மேலாண்மை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரிலும் வழிகாட்டுதலின் பேரில் ஆங்காங்கே வங்கிகள் செயல்படும். வைரஸ் தொற்றும் சிகப்பு பகுதிகளாக இருக்கக்கூடிய பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.