கொவிட்19: நோய்த்தொற்றை சிறப்பாக கையாளும் சிங்கப்பூர்

கொவிட் 19நோய்த்தொற்றை தடுப்பதற்காக சிங்கப்பூர் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அமல்படுத்தி வருகின்றது.

நோய் தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாக்க அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன குறிப்பாக அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே தற்போது சிங்கப்பூரில் இயங்கி வருகின்றன.அதிரடி திட்டங்களால் தற்ப்போது சிங்கப்பூரில் சமூக பரவல் என்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பில் முதன்மை வகிக்கிறது. குறிப்பாக தொழிலாளர் தங்குமிட விடுதி யில் உள்ள தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன குறிப்பாக அவர்களுக்கு தேவையான மருத்துவம் உணவுகள் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கான சிம்கார்டுகள் என அனைத்து அடிப்படை தேவைகளையும் அவர்களுக்கு பூர்த்தி செய்து வருகிறது சிங்கப்பூர் அரசு.

வெளிநாட்டு ஊழியர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் சிங்கப்பூர் மிகவும் கவனமாக இருக்கிறது, அவர்களுக்கு தேவையான ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமலும் சோர்வு ஏற்படாமல் இருப்பதற்கும் காணொளி காட்சிகள் மூலம் புத்துணர்ச்சி நிகழ்ச்சிகள் என பல்வேறு தரப்பட்ட நிகழ்வுகளை நடத்தி வருகிறது சிங்கப்பூர்.

நோய் தடுப்பிற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள அதிரடி திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக சீன மருத்துவம்,செல்லப்பிராணி அங்காடிகள். மற்றும் முடி திருத்தும் நிலையங்கள் என சிலவற்றை இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது .

அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாக எடுத்துள்ளதால் சிங்கப்பூரை உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளதது என்பது மேலும் சிறப்பு.