நடிகர் சூர்யாவுடன் இணையும் வாணிபோஜன்.

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் முதன்மையானவர் வாணி போஜன் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் மிகப்பெரிய தடத்தை பதிக்க இருக்கிறார் .

சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வாணிபோஜன் தமிழ் திரை உலகிற்கு ஓ மை கடவுளே என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

வாணி போஜன் தற்போது மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில், நடிகர் சூர்யா அவர்கள் தயாரிப்பில் வெளிவர இருக்கக்கூடிய இரண்டு திரைப்படங்களில் வாணிபோஜன் ஒப்பந்தமாகியுள்ளார், மேலும் வாணிபோஜன் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களின் இயக்கத்தில் வெளிவரக்கூடிய தொடரிலும் நடித்து வருகிறார் மேலும் ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் வெளிவர இருக்கக் கூடிய வெப் தொடரிலும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.