ஆன்லைனில் வெளியாகிய ஆர்.கே.நகர் திரைப்படம்!

தற்போது 144 தடை உத்தரவை என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் வணிக நிறுவனங்கள் போக்குவரத்துகள் கேளிக்கை விடுதிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

வீடுகளிலேயே தஞ்சம் அடைந்திருக்கும் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் பொழுதுபோக்காகவும் டிவிக்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் மக்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர் குறிப்பாக நெட்பிளிக்ஸ் அமேசான் போன்ற டிஜிட்டல் தளங்களில் புதிய திரைப்படங்களை கண்டுகளித்து வருகின்றனர் .

தற்போது திரையரங்கங்கள் மூடப்பட்டு இருப்பதால் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களை நாடி வருகின்றன தங்களின் திரைப்படத்தை வெளியிடுவதற்கு.வீட்டில் இருந்தபடியே குறைந்த கட்டணத்தில் அனைவரும் திரைப்படத்தை காணுவதற்கு டிஜிட்டல் தளங்கள் உதவுகின்றன இருப்பினும் திரையரங்கம் மற்றும் திரையரங்க தொழிலாளர்களின் வாழ்க்கை டிஜிட்டல் தளங்களால் கேள்விக்குறி ஆகின்றன.

ஆர்கே நகர் என்ற தமிழ் திரைப்படம் முதன்முதலில் டிஜிட்டல் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது இதனால் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்படாமல் நேரடியாகவே டிஜிட்டல் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிலைமை நீடித்தால் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்படாமல் நேரடியாகவே டிஜிட்டல் தளங்களில் திரைப்படங்கள் வெளியிடுவதால் பல்லாயிரக்கணக்கான திரைஅரங்க தொழிலாளர்கள் வேலை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.