நடிகர் விஜயின் மகன் சஞ்சய் சினிமாவில் களம் இறங்க உள்ளாரா.. வெளியான தகவல் இதோ…

Actor vijay son sanjay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் நடித்து வெளிவர உள்ள படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதத்தில் வெளியே ஆக இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக படம் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் மகன் ஜோசப் சஞ்சய் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்ற செய்தியால் வந்தவண்ணம் உள்ளன.

தெலுங்கு மொழில் வெளியாக உள்ள புட்சி பாபு இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இயக்குனர் சுகுமார் இயக்கிய படமான உப்பெனா படத்தை தமிழ் ரீமேக் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ராயாணன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் கதை பிடித்து போக நடிகர் விஜய் சேதுபதி தமிழ் ரீமேக்கான உரிமத்தை பெற்றுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிகர் விஜயிடம் உப்பெனா படத்தின் கதையை விவரித்துள்ளார். மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமுடன் இணைத்து நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. மேலும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வமாக தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.