தனது குடும்பத்திற்காக 600KM பைக் ஓட்டிய அஜித்..!!! வைரலாகும் செய்தி.

ajith bike ride

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பட்டியலில் மிக முக்கிய இடத்தில் இருப்பவர் தல அஜித். தமிழ் சினிமாவில் தல அஜித்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. தல அஜித்தை முதல் முதலில் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பாடகர் S .P. பாலசுப்ரமணியம் ஆவர். தமிழ் சினிமாவில் “அமராவதி” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் தமிழ் சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்து உள்ளார்.

தற்போது போனி கபூர் தயாரிப்பில் H . வினோத் இயக்கத்தில் “வலிமை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத் நடந்து வந்த நிலையில் கொரோன தொற்று காரணமாக படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த படத்தில் H .வினோத் “வலிமை” படத்தில் பல சண்டை காட்சிகள் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் சண்டை காட்சிகள் முழுவதும் ஹைதெராபாத் நடைபெற்றன. ஆகையால் படப்பிடிப்பின்போது சிறிய காயங்களால் தல அஜித் ஹைராபாடிலேயே தங்கி உள்ளார்.

இதனால் தல அஜித் விமான சேவைகள் இல்லாததால் ஹைதெராபாதிலேயே தங்கி உள்ளார். தற்போது பைக்லேயே ஹைதெராபாத் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். அவர் ரேஸ் உடை அணிந்து ரேஸ் பைக்யில் சுமார் 600 km பயணம் செய்து வந்துள்ளார். இதில் இருந்து அவருக்கு மிகவும் பிடித்தமான பைக் ரேஸ் இன்றளவும் மேற்கொண்டு வருகிறார் என்பது தெரியவருகிறது. இந்த படத்தின் படக்குழுவினர் கொரோன தொற்று காரணமாக “வலிமை” படத்தை 2021 ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளார்.