நடிகர் விஜய் 1.30 கோடி நிதி உதவி ..

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகரும் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் இளையதளபதி விஜய்.

தற்போது இளைய தளபதி விஜய் அவர்கள் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார். இளையதளபதி விஜய் திரையுலகம் மட்டுமல்லாமல் மக்களுக்கு சேவை செய்வதிலும் நாட்டம் கொண்டவர் .

விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி என பல்வேறு சமூக நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார் இளையதளபதி விஜய் அவர்கள்

தற்போது கொவிட்19 நோய்த்தொற்று தடுப்பு பணிகளுக்காக தளபதி விஜய் அவர்கள் 1.30 கோடி ரூபாய் நிதி உதவியாக அளித்திருப்பது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது .தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் இந்திய திரை உலகம் அரசியல் பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் கொவிட்19 என்னும் நோய் தடுப்பு பணிகளுக்காக நிதி உதவி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது .