முகநூலில் உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட குடும்பத்தினருக்கு உதவிகள்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள துளசியாப்பட்டினம் இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இருப்பதால் தங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் படி முகநூலில் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதனைத் தொடர்ந்து அருகில் இருப்பவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வேதாரணியம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் இந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் முக கவசங்களை வழங்கினார் அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இயலாதவர்களுக்கு உதவி செய்துவரும் காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் தன்னார்வ அமைப்புகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.