ஆல்ப்ஸ் மலையில் ஒளிர்விக்கப்பட்ட இந்திய மூவர்ண தேசியக் கொடி!!!

கொவிட்19 நோய்த்தொற்றை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன ,தற்போது இந்தியாவிலும் இந்த நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது இருப்பினும் இந்த நோய்த்தொற்றை இந்தியா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

தற்போது ஸ்விட்சர்லாந்தில் 25000க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் ,இந்தியாவில் இந்த நோய் தொற்றுக்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Matterhan Mount Alps Ghat

நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவிற்கு சுவிட்சர்லாந்து உறுதுணையாக இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள மேட்டர்கான் என்ற மலையில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை வண்ண விளக்குகளால் ஒளிர செய்துள்ளது .

இந்தியாவில் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடி வரும் மக்களுக்கும் அரசுக்கும் நம்பிக்கையூட்டும் மற்றும் புத்துணர்ச்சி வழங்கும் வகையில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை ஒளிர விட்டதாக அந்த அரசு தெரிவித்திருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஒளிர செய்யப்பட்ட இந்திய தேசிய கொடியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பதிவேற்றி இருக்கிறார் மேலும் உலகமே இந்த நோய்த்தொற்று எதிர்த்துப் போராடி வருகிறது நிச்சயம் மனித குலம் செழிக்கும் என்றும் அந்த பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார் .