இந்தியாவைப் போல் சிங்கப்பூரிலும் கைதட்டும் நிகழ்வு.!

சிங்கப்பூர் அரசு கொவிட்19 நோய்த்தொற்றை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறது மேலும் நோயை தற்போது கட்டுக்குள் கொண்டும் வந்துள்ளது.இந்நிலையில் மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோய்த் தொற்றை எதிர்த்து போராடி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ,சிங்கப்பூரில் வருகிற 20-ஆம் தேதி திங்கட்கிழமை பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடி கைகளைத் தட்டி பொது சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றுக்கு எதிராக சிங்கப்பூர் அரசும் பொது மக்களும் ஒன்றிணைந்து போராடி வருவதைக் குறிக்கும் வகையில் வரும் 20 ஆம் தேதி திங்கள் இரவு 8 மணிக்கு அனைவரும் கைதட்டி ஆதரவு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதே போன்று இந்தியாவிலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் கடந்த மாதம் இந்தியா முழுவதும் கை தட்டப்பட்டது மேலும் மணிகள் கொண்டும் ஓசைகள் எழுப்பப்பட்டன இந்த நிகழ்வில் இந்தியாவில் உள்ள அனைத்து பொது மக்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .