மே 4 முதல் இந்தியாவில் விமான போக்குவரத்து தொடக்கம்.

கொவிட் 19 :நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ,இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது .

இந்தியாவில் கொவிட்19 நோய்த்தொற்று குறைவாக உள்ள மாநிலங்களில் இம்மாதம் 20 ஆம் தேதி முதல் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்துகளை குறிப்பிட்ட அளவில் துவங்கலாமென அரசு தெரிவித்திருக்கிறது .

ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற மே மாதம் நான்காம் தேதி முதல் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களின் முன்பதிவு தொடங்கும் என அறிவித்திருக்கிறது.

சர்வதேச விமானங்களை பொறுத்தவரையில் ஜூன் 1ஆம் தேதி முதல் சர்வதேச விமானங்களின் முன்பதிவு துவங்கும் என அறிவித்திருக்கிறது.