வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை தற்போது அழைத்து வர இயலாது மத்திய அரசு.

இந்தியாவில் உள்ள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் தற்போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

இந்தியர்கள் பல்வேறு தரப்பினர் வேலை நிமித்தமாகவும் வர்த்தக நிமித்தமாகவும் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர் நோய்த்தொற்று கடுமையாக பரவிவரும் இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தி இருக்கின்றனர் மலேசியா சென்ற முல்லை நாதன் என்பவர் தற்போது மலேசியாவில் சிக்கியுள்ளார் மேலும் இவருடன் 350க்கும் மேற்பட்ட வர்கள் மலேசியாவில் உள்ளனர். தற்போது மலேசியாவில் சிக்கியுள்ள முல்லை நாதன் என்பவர் 350க்கும் மேற்பட்ட இந்தியர்களை உடனடியாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் ஞானசேகரன் மூலம் மனு செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டது அதில் தற்போது நோய்த்தொற்று கடுமையாக இருக்கும் நேரத்தில் வெளிநாட்டில் இருக்கக்கூடிய இந்தியர்களை, அழைத்து வர எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது என்றும் அப்படி அழைத்து வந்தால் 130 கோடி இந்திய மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மனுதாரர் தரப்பில் இந்தியாவில் சிக்கியிருந்த மலேசியர்களை மீட்பு விமானம் அனுப்பி மலேசியா மீட்டது போல இந்திய அரசு மீட்கவில்லை என்று தெரிவித்திருந்தனர் இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர் .