திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் வேண்டுகோள்.

திருவாரூர் மாவட்டத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் திரு.கோட்டூர் ராகவன் அவர்கள் தனது கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அன்பான பாஜக உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

கொரோனா பாதிப்பில் இருந்து நம் மக்களை காப்பாற்ற நமது பாரத பிரதமர் மோடிஜீ அவர்கள் மிகவும் போராடி நம் மக்களை காப்பாற்றி வருகிறார்கள் வரும் மே 3தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளனர் ஆனால் பல பேர் அந்த உத்தரவை காப்பாற்றாமல் சுற்றி வருகிறீர்கள் பல மாநில மாவட்ட ஓன்றிய நிர்வாகிகளுக்கு போன் செய்து காவல்துறை பைக்கை பிடித்து விட்டது சொல்லி விடுங்கள் என கேட்பது வாடிக்கையாகி விட்டது நோயில் இருந்து மக்களை காப்பாற்ற சட்டம் கடுமையாக்கபட்டு உள்ளது மத்தியில் நாம் தான் சட்டத்தை போட்டு உள்ளோம் அதை நாம் மதித்து நடக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது அதை விட்டு விட்டு மத்தியில் நாம் ஆள்கிறோம் நம்மை யார் மறைப்பது என்று அதிகார தோனியில் யாரும் ஈடுபட வேண்டாம் கண்டிப்பாக சட்ட திட்டத்தை மதிப்பது நமது தலையான கடைமையாகும் ஆகையால் இன்று மருத்துவர் செவிலியர் காவல்துறையினர் துப்புறவு தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் ஆகியோர் தன் உயிரை பணையம் வைத்து நம்மை காப்பாற்றி வருகிறார்கள் ஆகையால் அணைவரும் சட்ட திட்டத்தை மதித்து நடந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் கட்டாயம் அணைவரும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லவும் முடிந்த அளவு தங்களால் முடிந்த முகக்கசவம் யாருக்காவது ஏழை எளியோருக்கு வாங்கி கொடுக்கவும் காவல் துறையினர் கொரோனா என்ற போரில் வீரராக போராடி வருகிறார்கள் அவர்களிடம் நம் விவாதங்களை செய்வதை தவிர்ந்து ஓத்துழைப்பு கொடுக்கவும் எந்த ஓரு நிர்வாகிகளும் இனி இருக்கும் ஊடரடங்கு காலத்தில் சிபாரிசுக்கு போவதை தவிற்கவும்.. சட்டத்தை மதிப்போம் கொரோனாவை விரட்டி அடிப்போம்

தாயகப்பணியில்

கோட்டூர்.எம்.இராகவன்
BJP.மாவட்டதலைவர்
திருவாரூர் மாவட்டம்