அஜித்தால் சினிமாவில் நடிக்க வந்தேன்..! டாப் ஹீரோ கூறிய உண்மை

தமிழ் சினிமாவுலகில் தற்போது மிக பெரிய உச்சத்தை தொட்டு திகழ்ந்து வரும் நடிகர் திரு.தல அஜித்குமார்.

தற்ப்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கும் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தல அஜித்தை பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை நேர்காணல்களில் பதிவிடுவார்கள்.

அந்த வகையில் தற்ப்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் சூர்யா, தொகுப்பாளராக ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் தல அஜித்தை பற்றி சுவரஸ்யமான கருத்தை தெறிவித்துள்ளார்.

இதில் இவர் கூறியது “எனக்கு அஜித் அவர்களை மிகவும் பிடிக்கும், நான் முதலில் நடித்த படம் நேருக்கு நேர். இப்படத்தில் முதலில் அந்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்து கொண்டு இருந்தார். பின்பு சில தவிர்க்க முடியாத காரணங்களால், படத்தில் இருந்து விலகினார். அதற்கு பிறகு நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தேன். அதனால் தான், நான் இப்போது இந்த திரையுலகில் இருக்கிறேன் என்று கூட கூறலாம்” என்று கூறியுள்ளார்.