சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்களுக்காக வீடியோ வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உத்வேகமும் புத்துணர்ச்சியை அளிக்கும் வகையிலும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கிருமி தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் எனவும்.அரசின் அனைத்து நோய்த் தடுப்புக்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அந்த காணொளியில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருக்கிறார்.

நோய் தடுப்பு பற்றிய இந்த விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டதற்காக சிங்கப்பூர் தகவல் தொடர்பு துறை அமைச்சர் திரு. ஈஸ்வரன் அவர்கள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் .

மேலும் ஊழியர்களின் ஆரோக்கியம் நல்வாழ்வு மற்றும் அவர்களின் சிறப்பான தேவை மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திரு.ஈஸ்வரன் அவர்கள் தெரிவித்திருக்கிறார் .