அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத் தலைவர் வேண்டுகோள்.

அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின்

தலைவர் டாக்டர் AM.திரு. மூர்த்தி தேவர் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் அதில்.

பொதுமக்கள் அனைவரும் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகள் மற்றும் அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார் .

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வெளியில் வரும்படியும் அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் அரசுக்கு தகவல் தெரிவித்து உரிய அனுமதியுடன் வெளியில் நடமாட வேண்டும் என்றும்.வெளியில் வரக் கூடிய அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி நோய் தொற்றிலிருந்து அனைவரும் மீண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் .

நோய்தொற்று பற்றிய வதந்திகளை தவிர்ப்பதற்கு அரசனுடைய சமூக வலைதளங்கள் மற்றும் அதிகாரபூர்வ சுகாதாரத்துறை இணையதளங்களை பார்க்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் மேலும் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் இணையதள பிரிவு நோய் தொற்றுபற்றிய விழிப்புணர்வுகளை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

செய்தி வெளியீடு :அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் இணையதள பிரிவு