மாஸ்டர் ரிலீஸ் அசத்தலான அப்டேட்

விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இம்மாதம் ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 3-ந் தேதி வரை 144ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்த ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் திரையரங்குகள் திறக்க சில நாட்கள் ஆகும் என்பதால். மாஸ்டர் படத்தை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ந் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெறிகிறது