அனைவரும் உதவியாக இருப்போம் – சாய்பல்லவி வேண்டுகோள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் நடிகை சாய்பல்லவி, கொரோனா நோய் தொற்று நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஊகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் மருத்துவ குழுக்களும், காவல் துறையினரும் தீவிரமாக சேவையாற்றி வருகிறார்கள். அவர்கள் சேவையை பலரும் பாராட்டுகின்றனர்.

இந்நேரத்தில், நடிகை சாய்பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் அனைத்து வழிகளிலும் உதவியாக இருப்போம். தன்னலமில்லாமல் சேவையாற்றி வரும் மருத்துவ, சுகாதார பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்கள் அனைவரும் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் .

Saipallavi Image