வில்லியாக அறிமுகமாகும் பூமிகா!!

தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்த பூமிகா தற்ப்போது பிரபல நடிகரின் படத்தில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் இளைய தளபதி விஜயுடன் பத்ரி, சூர்யா ஜோடியாக சில்லுனு ஒரு காதல், ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர் பூமிகா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். 2007-ல் யோகா ஆசிரியர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் பூமிகா தற்போது வில்லி வேடத்துக்கு மாறி இருக்கிறார். பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில் பூமிகா வில்லி வேடம் ஏற்றுள்ளார். இதில் கதாநாயகியாக நடிக்க சோனாக்சி சின்கா, கேத்தரின் தெரஸா ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு, தற்போது ஸ்ரேயாவை தேர்வு செய்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் பெயர் மற்றும் பட்டப்படிப்பு துவக்கம் ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அந்த படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.


Actress Bhoomika