கடைசி நோயாளியும் குணமாகினார் – தற்காலிக சிறப்பு மருத்துவமனையை மூடிய சீனா

கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் ஊகான் நகரில் இருந்துதான் கண்டறியப்பட்டது.

ஊகான் நகரில் மிக வேகமாக கொரோனா பரவியதும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதற்கென ஒன்பது நாட்களில் சீனா மருத்துவமனை ஒன்றை கட்டியது. இந்த மருத்துவமனையில் சுமார் 1000 படுக்கைகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது.

இந்தநிலையில், ஊகான் நகரில் கட்டப்பட்ட சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் உடல்நலம் பெற்று டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து, அந்த சிறப்பு மருத்துவமனை மூடப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.