நடிகை ரைசாவிற்கு திருமணம் ?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா, அவங்களதான் கல்யாணம் பண்ண போறேன், அவங்ககிட்ட சொல்லிடாதீங்க என்று பதிலளித்துள்ளார்.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசாவில்சன் . இதன்பிறகு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்

ரசிகர்களின் கேள்விக்கு எப்போதும் ஜாலியாக பதிலளிக்கக் கூடியவர் ரைசாவில்சன். அந்தவகையில் தனது ரசிகர் ஒருவர், ‘ஹரீஷ் அண்ணாவும் நீங்களும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ரைசாவில்சன், “ஆம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். ஆனால் இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள். அவருக்கு இது சர்ப்பிரைஸ்” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.