சிங்கப்பூரில் சிறப்பாக கடைபிடக்கப்படும் சுய ஊரடங்கு !!

கொரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கை அறிவித்திருக்கின்றன, அதன்படி சிங்கப்பூரிலும் அந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதாவது நாடு முழுவதும் முடக்கப்படாமல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத வணிகம் மற்றும் அனைத்துசெயல்பாடுகளும் நிறுத்தப்படும். இதற்கு ஆங்கிலத்தில் CIRCUIT BREAKER என்று அழைப்பார்கள் .இந்த காலகட்டங்களில் அத்தியாவசிய சேவைகளான உணவு ,மருத்துவம் குறிப்பிட்ட அளவிலான பொதுப்போக்குவரத்துகள் மக்களுக்கு தேவையான அரசுத்துறை அத்தியாவசிய பணிகள் அனைத்தும் செயல்படும். இருப்பினும் அரசின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வருகின்றனர்.

அப்படி அவர்கள் வரும்போதும் அதிக அளவிலான சமூக இடைவெளிகளை பின்பற்றுகின்றனர் இதனால் நோய் பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்படும் .சிங்கப்பூர் அரசு மூத்தகுடிமக்கள் வெளிநாட்டு ஊழியர்கள் என அனைவருக்குமான பாதுகாப்பு ஆலோசனைகளை சிறப்பாக வழங்கி வருகிறது. நாட்டில் உள்ள அனைவருமே இதனை சுய ஊரடங்காக கருதி அரசிற்கு பெருமளவு ஆதரவளித்து வருவது குறிப்பிடதக்கது.