நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் கொரோனா விழிப்புணர்வு பாடல் !!!

உலகெங்கிலும் கொரோனா நோய் பரவலை தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் பெருமுயற்ச்சி எடுத்து வருகின்றன .

இந்தியாவிலும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .தற்ப்போது அனைவரும் 144 தடை உத்தரவில் தனிமையிலும் இருந்து வருகின்றனர்.அணைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களும் தனது குடும்பத்தினரையும் விட்டுவிட்டு பணியாற்றிவருகின்றனர் .இந்த சூழ்நிலையில் அனைவரும் மன இறுக்கத்துடன் இருக்கும் இந்த வேளையில் உத்வேகத்தையும் நேர்மறை எண்ணங்களையும் விதைக்கும் வகையில் விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் திரைப்பட குழுவினர் 

இந்தப்பாடலுக்கான இசையை அமைத்திருக்கிறார் சாதக பறவைகள் ஷங்கர் .பாடலுக்கான படத்தொகுப்பு மற்றும் காட்சி அமைப்பு ராம்செழியன் .முன்னதாக இந்த விழிப்புணர்வு பாடலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு .விஜயபாஸ்கர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பார்வையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் திரைப்படம் இந்த ஆண்டு வெளிவர இருக்கிறது .தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் .

#STAY HOME STAY SAFE

Stay Home Stay Safe A Musical Video Pledge .Dedicated To All Health Care Workers ..Our Sincere Thanks To Dr.Vijayabhaskar Visualized And Editing :Ram Chezhian Music Director :Shankar Thanks To:Kundrathile Kumaranukku Kondattam Team Thanks To:Dhayanandhan Media Partner:Madras Stattion

Publiée par Madras Station sur Vendredi 10 avril 2020