சன் டிவியில் பணிபுரியும் ஊழியர்கள் கொடுத்த மொத்த நிதித்தொகை எவ்வளவு தெரியுமா…? இத்தனை கோடியா…?

கொரானோ வைரஸ் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிதி உதவி அளித்து வந்தாலும், அது அனைவரிடமும் பொய் சேர்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் சினிமா துறையில் உள்ள கடை மட்ட ஊழியர்களும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் ரஜினி, கமல், நயன்தாரா, சிவகார்த்திக்கேயன், அஜித், விஜய், இன்னும் பல நட்சத்திரங்கள் நிதித்தொகை அளித்தனர்.

மேலும் தற்போது சன் டிவி நிதிக்குழுமம் மொத்தம் 10 கோடி நிதி தொகை அளித்துள்ளது. சன் குழுமத்தில் பணிபுரியும் 6000 பேரின் ஒரு நாள் ஊதியம் நிதித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.