சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் ஒளியூட்டிற்கு காத்திருக்கும் வண்ணத் தோரணங்கள் .

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூர் லிட்டில் இந்தியா சிராங்கூன் சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது அமைக்கப்பட்டுள்ள வண்ணத் தோரணங்கள் நடுவில் தீப ஒளி தெரிவது போலவும் மேளங்கள் மற்றும் வீணைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன .

தற்போது லிட்டில் இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத் தோரணங்கள் இம்மாதம் ஒளியூட்டப்பட இருக்கின்றன .

தேக்கா லிட்டில் இந்தியா பகுதியில் இந்த வண்ண விளக்குகளால் ஆன தோரணங்களை பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts